என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்"
உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல்-அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் தனது உடல்நிலையை காரணமாக வைத்து ஜாமீன் கேட்டார். அதனால், கடந்த மார்ச் மாதம், அவருக்கு 6 வார கால ஜாமீன் அளிக்கப்பட்டது.
6 வார காலம் முடிந்தவுடன், கடந்த 7-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்கு சென்றார். இந்நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி, தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பதற்றமும், மனஅழுத்தமும் நவாஸ் ஷெரீப்பின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். #NawazSharif #ShahbazSharif
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவருமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மனைவியின் மரணத்துக்காக பரோலில் வந்தார். பின்னர் அவருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
முன்னதாக தனது மனைவியின் உடல் நலக்குறைவு மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். நவாஸ் ஷெரீப்பின் கட்சிப்பணிகளை அவரது சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப்பும் ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 நாள் காவல் விதிக்கப்பட்டது. இதனால் உரிய தலைமையோ, வழிகாட்டுதலோ இன்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் தவித்தனர். எனவே சுமார் 4 மாதங்களுக்குப்பின் நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். இதில் முதல் நிகழ்வாக கட்சியின் மத்திய செயற்குழுவை அவசரமாக கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே அவர் மீது போடப்பட்டு இருந்த தேசத்துரோக வழக்கு ஒன்று லாகூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர் கோர்ட்டில் ஆஜரானார். #NawazSharif #ShahbazSharif

வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஷாபாஸ் ஷரிப் 10 நாள் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னதாக பாகிஸ்தானில் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தலையிடக்கூடும் என்று குற்றம்சாட்டிய போலீசார் தடுப்புக் காவல் சட்டப்படி லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif

குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானில் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தலையிடக்கூடும் என்று குற்றம்சாட்டிய போலீசார் தடுப்புக் காவல் சட்டப்படி லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
லண்டனில் சொகுசு பங்களா வாங்கியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #NawazSharifreleased
இஸ்லாமாபாத்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவந்த நிலையில் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் நவாஸ் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷரிப், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிறையில் இருந்து 3 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டுள்ளார்.
#Sharifjailsentencessuspended #NawazSharifreleased

அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். #NawazSharif #CorruptionCase
இஸ்லாமாபாத்:
பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகள் மற்றும் முகமது சப்தாருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்து கடந்த மாதம் 6-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்குகள் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி அர்ஷத் மாலிக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நவாஸ் ஷெரீப்பை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கில் தொடர்புடையவர்கள், நீதிபதி மற்றும் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அதிகாரிகள் தடைவிதித்தனர். பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கோர்ட்டில் நீதிபதி முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே சமயம் இந்த வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. முந்தைய அவன்பீல்டு வழக்கிலும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை என்பதும், இதனால் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கோர்ட்டு ஏற்கனவே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. #NawazSharif #CorruptionCase #tamilnews

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற மறுப்பு தெரிவித்துள்ளார். #NawazSharif #Refuses #Hospital
இஸ்லாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் லண்டன் நகரில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்த வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் இதய நோயாளி ஆவார். சர்க்கரை நோயும் தாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் நீர்ப்போக்கு பிரச்சினையால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளார். அவரை நேற்று முன்தினம் ‘பிம்ஸ்’ என்று அழைக்கப்படுகிற பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர்.
இதுபற்றி பரிசோதனை குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு டாக்டர் கூறும்போது, “அவரது ரத்தத்தில் யூரியாவின் அளவு கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. நீர்ப்போக்கு பிரச்சினையும் கடுமையாக உள்ளது. இ.சி.ஜி. பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கடந்த கால பிரச்சினைகளும் கேட்டு கவனத்தில் கொள்ளப்பட்டன. அவர் ஏற்கனவே எடுத்து வருகிற மாத்திரை, மருந்துகளை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டார்” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் 2 மருத்துவர்களை கொண்ட குழு நவாஸ் ஷெரீப்பை பரிசோதித்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்ந்து, தொடர்ந்து சிகிச்சை செய்துகொள்ளுமாறு பரிந்துரை செய்ததாகவும், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும், சிறையிலேயே சிகிச்சை பெறுகிறேன் என கூறி விட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ டாக்டர் அசார் முகமது கியானி கருத்து தெரிவிக்கையில், “அவரது இதயத்துடிப்பு இயல்பாக இல்லை என்பதாலும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தை பாதிக்கலாம் என்பதாலும் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு சிறை நிர்வாகமும், தற்காலிக அரசும் பரிந்துரை செய்தன” என கூறினார். #NawazSharif #Refuses #Hospital #tamilnews

×

X